Saturday, July 9, 2011

Saudi Vara Ninaippavargalukku

Assalamu Alaikkum
Reply for Adiraixpress Articals.

உங்கள் சகோதரன் குறிப்பிட்டது ஓரளவு உண்மை என்றாலும் ஒரு சில யதார்த்தங்களை (சவுதி ஜித்தாவில் 20  வருடம் இருக்கும்) நாங்கள் சொல்ல கடமை பட்டுள்ளோம்.

1 பொதுவாக சவூதிக்கு (தனி கஃபில் விசாவில்) வர நினைப்பவர்கள் ஊரிலிருந்து சவுதி வந்து இக்காமா என்னும் குடியுரிமை கிடைக்கும்
வரை உள்ள சிலவுகளை தயார் படுத்த வேண்டும்.

2 . இங்கு வந்தவுடன் இக்காமா என்னும் குடியுரிமை பெற 1 வருடத்திற்கு உள்ள சிலவுதொகை 2000 ரியலை தயார் படுத்த வேண்டும். (2  வருடத்திற்கு 3000 ரியால்). இங்கு வந்து குடியுரிமை கிடைக்காததற்கு ஒரு சில காரணமும் உண்டு, அதில் போதிய பணம் இல்லாதவரும், இங்கு உள்ள தவறான ஏஜென்டிடம் பணம் கொடுத்து நம்புவதும், கஃபில் ஆபீசுக்கு சரியான அரசாங்க கட்டினதுக்கு தொகை போயி சேராததும் காரணம் என்று பல காரணம் உண்டு.

3 . ஒருவருடம், இரண்டு வருடம்..., ஆன பல சகோதரர்கள் குடியுரிமை புதுப்பிக்கப்பட தேவையான சிலவுகளை தயார் படுத்தாமல் ஏஜென்டிடம் பாதி பணத்தை கொடுத்து மீதியை இகாமா புதுப்பிதவுடன் (வீட்டுக்கும் பணம் அனுப்ப வேண்டிய தர்ம சங்கடத்தில் இருப்பதால்) மீதி தருவேன் என்று சொல்வதும், அந்த ஏஜென்ட் மீதி பணம் வரும்வரை இகாமா புதுப்பிக்க படுவதை கிடப்பில் போடுவதும் ஒரு சில நபர்களுக்கு ஏற்பட்டு விட்டது.

4 . மேற் கூறப்பட்ட மற்றும், கட்டுரையாளர் சொன்ன விசியங்களுக்கு அப்பாற்பட்ட செய்தி என்னெவென்றால் இங்கு வர இருப்பவர்கள் (ஜெத்தா, தம்மாம், ரியாத்) 1000  கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஜ்ரானில் விசா எடுப்பதினால்தான் அதிக சிரமத்திற்கு முக்கிய காரணம். (அங்குதான் விசா விலை குறைவு)  இகாமா புதுபிக்க செல்லாததும், நஜ்ரானுக்கு செல்ல குறைந்தது 4  நாட்கள் லீவு  கிடைக்காததும், நஜ்ரானில் விசா எடுத்தாலும் பரவாயில்லை, அங்கிருந்து 200  கிலோ மீட்டர் துலைவில் உள்ள அரபியிடம் விசா எடுப்பதினால் ஒருவேளை அந்த அரபியை பார்க்க முடியாமல் போய்விடும்.

5 . அதைவிட வேதனையான செய்தி என்னவென்றால் நஜ்ரான் அல்லாத  ஜெத்தா, தம்மாம் கஃபில் இடம் விசா எடுத்தால் 40  முதல் 50  ஆயிரம் ருபாய் வரை கூடுதல் சிலவாகும். அந்த கூடுதலான சிலவை லாபமாக வைத்து ஏஜென்ட்டுகள் நஜ்ரானில் எடுக்கிறார்கள்.

6 . மேலும் விசா கொடுக்கும் கஃபிலை குடியுரிமை (இகாமா) கிடைத்தவுடன் அரபி தெரிந்தவரை வைத்து நீரில் போய் பார்த்து, சலாம் சொல்லி, செல்போன் நம்பர் வாங்கி தன்னை அறிமுகம் படுத்தி கொள்ளாததும் அதி முக்கய காரணம்.
இவற்றை எல்லாம் தவிர்க்க சில யோசனைகள் எங்களைபோன்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. அதை விட்டு விட்டு தன குடும்ப கஷ்டத்தில் சவூதிக்கு வர (குறைந்த சிலவில் சாப்பாடு, தங்க இடம், போன் சிலவு, மற்ற இதர சிலவு, அணைத்து தீய பழக்கம் இல்லாத, புந்த மக்கா மதீனா மற்றும் இஸ்லாமிய வரலாற்று சிறப்பிடம் உள்ள இந்த மண்ணிற்கு)  நினைப்பவர்களின் பெற்றோர்களின் வயிற்றில் புளியை கரைப்பது கொஞ்சம் ஓவர் தான். 

கடைசியாக ஒரு குறிப்பு.....ஒவ்வாரு கால கட்டத்திற்கு தகுந்த வாறு ஒரு சில மாற்றங்கள் எல்லா நாட்டிலும் வரத்தான் செய்யும்.